இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 247 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலை பெற்றது.
211 ரன்கள் பின் தங்கிய நிலையில், வங்கதேசம் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தரப்பில் ஷாத்மன் இஸ்லாம் (12 ரன்கள்), அனமுல் ஹேக் (19 ரன்கள்), மோமினுல் ஹேக் (15 ரன்கள்), நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (19 ரன்கள்), முஸ்ஃபிகர் ரஹீம் (26 ரன்கள்) எடுத்தனர். லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் தரிண்டு ரத்னாயகே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
வங்கதேச அணி இலங்கையைக் காட்டிலும் 96 ரன்கள் பின் தங்கியுள்ளது. கைவசம் இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே வங்கதேச அணியிடம் உள்ளது. போட்டி நிறைவடைய இன்னும் இரண்டு நாள்கள் மீதமிருப்பதால், வங்கதேசத்தைக் காட்டிலும் இலங்கை அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
summary
Bangladesh are struggling in the second innings of the second Test against Sri Lanka, losing wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.