வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்) படம் | AP
கிரிக்கெட்

யு-19 முதல் ஒருநாள் போட்டி: வைபவ் சூர்யவன்ஷி அதிரடி; இந்தியா அபார வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

DIN

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 27) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 42.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ராக்கி ஃபிலிண்டாஃப் 56 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஐசக் முகமது 42 ரன்களும், பென் டாக்கின்ஸ் 18 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் கனிஷ்க் சௌகான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹெனில் படேல், அம்பிரிஷ் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

சூர்யவன்ஷி அதிரடி; இந்தியா அபார வெற்றி

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 24 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அபிக்யான் குண்டு 45 ரன்களும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 21 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஏஎம் பிரெஞ்ச் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜாக் ஹோம் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் முலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

summary

The Indian team achieved a resounding victory by defeating England in the first match of the Under-19 ODI series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

DINAMANI வார ராசிபலன்! | Nov 23 முதல் 29 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

நவ. 23-ல் திருமணம்..! விடியோ வெளியிட்டு உறுதிசெய்த ஸ்மிருதி மந்தனா.!

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

SCROLL FOR NEXT