கான்ஸ்டாஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமர் ஜோசப்...  படம்: ஏபி
கிரிக்கெட்

ஆஸி.க்கு எதிராக வரலாறு படைத்த ஷமர் ஜோசப்..! தோல்வியிலும் மிளிரும் மே.இ.தீ. வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசத்திய மே.இ.தீ. வீரர் ஷமர் ஜோசப் குறித்து...

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மே.இ.தீ. வீரர் ஷமர் ஜோசப் கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் கடந்த ஜூன் 25-இல் பார்படாஸில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் ஆஸி. அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது.

இருப்பினும் மே.இ.தீ. அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் உலக கிரிக்கெட்டில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

ஆஸி.க்கு எதிரான இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், 2-ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என அசத்தினார்.

ஆஸி.க்கு எதிராக இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மற்ற அணிகளுக்கு எதிராக 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

ஆஸி.க்கு எதிராக முதல் 3 டெஸ்ட்டிலும் 5 விக்கெடுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் மே.இ.தீ.வீர்ராக ஷமர் ஜோசப் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் இருக்கும் வீரர்கள்:

1. டாம் ரிச்சர்ட்சன் (இங்கிலாந்து)

2. சார்லி லெவலின் (தென்னாப்பிரிக்கா)

3. பிராங்க் போஸ்டர் (இங்கிலாந்து)

4. ஃபசல் மஹ்மூத் (பாகிஸ்தான்)

5. ஷமர் ஜோசப் (மே.இ.தீ.)

Shamar Joseph has become the first west Indians bowler to take 5 wickets in the first 3 Tests against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!

சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!

சுதந்திர நாள்: இபிஎஸ், விஜய் வாழ்த்து!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

அரசுப் பேருந்தில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT