படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: 418 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா டிக்ளேர்; ஜிம்பாப்வே நிதானம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

DIN

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூன் 28) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 418 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய லுஹான் பிரிட்டோரியஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

லுஹான் பிரிட்டோரியஸ் அதிகபட்சமாக 153 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் 100* ரன்களும், டெவால்ட் பிரீவிஸ் 51 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே நிதானம்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் குவித்திருந்த 418 ரன்களுடன் தென்னாப்பிரிக்க அணி டிக்ளேர் செய்ய, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், சீன் வில்லியம்ஸ் மற்றும் கேப்டன் கிரைக் எர்வின் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றனர்.

சீன் வில்லியம்ஸ் 45 ரன்களுடனும், கிரைக் எர்வின் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் கோடி யூசஃப் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

summary

South Africa declared their first innings of the first Test against Zimbabwe after scoring 418 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20-ல் புது வரலாறு..! தரவரிசையில் சாதனையுடன் முதலிடத்தில் அபிஷேக் சர்மா!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

ஏலகிரியில் குவியும் மக்கள்! மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

Idli kadai public review - இட்லி கடை எப்படி இருக்கு? | Dhanush | Arun Vijay

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT