ஜஸ்பிரித் பும்ரா படம் | AP
கிரிக்கெட்

அளவுக்கு அதிகமாக பும்ராவை நம்பியிருக்கும் இந்திய அணி: முன்னாள் கேப்டன்

இந்திய அணி அளவுக்கு அதிகமாக ஜஸ்பிரித் பும்ராவை நம்பியிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணி அளவுக்கு அதிகமாக ஜஸ்பிரித் பும்ராவை நம்பியிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பும்ராவை நம்பியிருக்கும் இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அவருக்கு உறுதுணையாக தேவையான நேரத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தவறினர். இதனால், பும்ராவின் மீதான பந்துவீச்சு பணிச்சுமை அதிகமானது.

இந்த நிலையில், இந்திய அணி அளவுக்கு அதிகமாக ஜஸ்பிரித் பும்ராவை நம்பியிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அளவுக்கு அதிகமாக பும்ராவையே நம்பியிருக்கிறது. அவர் ஒருவர் மட்டுமே விக்கெட்டுகளை கைப்பற்றுவது எளிதான விஷயம் கிடையாது. அணியில் அதிக அளவிலான அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேண்டும். இந்திய அணி குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். பேட்டிங்கில் சொதப்பியதால் முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்தோம்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சரியான வீரர்களை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். மேலும், அணியின் பந்துவீச்சு மிகச் சரியாக இருக்க வேண்டும். ஷுப்மன் கில் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஒரு போட்டியிலேயே அவரது கேப்டன் பொறுப்பு குறித்து மதிப்பிடுவது கடினம். அவருக்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார்.

Former captain Mohammad Azharuddin said India should play left-arm wrist spinner Kuldeep Yadav in the Edgbaston Test against England to add more experience to their bowling attack and reduce the burden on pace talisman Jasprit Bumrah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

நயன்தாராவின் போலீஸ் அவதாரம்! டியர் ஸ்டூடன்ஸ் டீசர்!

பிபாஷா பாசுவை உருவ கேலி செய்தது ஏன்? மன்னிப்பு கேட்ட மிருணாள் தாக்குர்!

முதுமலையில் யானைகளோடு சுதந்திர தினம் கொண்டாடிய அதிகாரிகள்!

SCROLL FOR NEXT