படம் | AP
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. நாளை லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன.

தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர் அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் ஆல்ரவுண்டரான ஜியார்ஜ் லிண்டே கூடுதல் வீரராக சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் போட்டியில் அவர் அதன் பின் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இறுதிப்போட்டியை துபையில் விளையாடும் சூழல் ஏற்பட்டால், அந்த அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள். அதன் காரணமாகவே, இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜியார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT