நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கௌர்.. 
கிரிக்கெட்

நடுவருடன் வாக்குவாதம்: விதிகளை மீறிய ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம்!

டபிள்யூபிஎல்: விதிகளை மீறிய ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

மகளிர் பிரீமியர் லீக்கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்தை விதிகளை மீறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர்?

மெதுவாக பந்துவீசியதால் 19-வது ஓவரின் போது மூன்று பேர் மட்டும் வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும் என்று நடுவர் அஜிதேஷ் அர்கால் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அமெலீயா கெர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்மன்பிரீத் கௌர் லெவல் -1 குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவர் சட்டப்பிரிவு 2.8-ஐயும் மீறியுள்ளார். இதனால், லெவல்-1 விதிமீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்! இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் பேட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT