ஆர்சிபி வீராங்கனைகள் சேலையில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி மகளிரணி முதலிரண்டு போட்டிகளில் வென்று கடைசி 4 போட்டிகளில் தோல்வியுற்றது. இருப்பினும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பிருக்கிறது.
மகளிர் நாளை முன்னிட்டு நேற்றிரவு லக்னௌவில் ஆர்சிபி வீராங்கனைகள் சேலை அணிந்து கொண்டாடினர்.
ஆஸி. வீராங்கனை எல்லீஸ் பெர்ரியின் சேலை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று இரவு ஆர்சிபி அணியுடன் யுபி வாரியர்ஸ் அணி மோதுகிறது.
யுபி வாரியர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5இல் தோல்வியுற்று இந்தத் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
ஆர்சிபி அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றால் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடம் பிடிக்கலாம். இல்லையெனில் தொடரிலிருந்து வெளியேறும். அதனால் இந்தப் போட்டி முக்கியமான ஒன்றாக இருக்கும்.
இந்நிலையில் இவர்களது கொண்டாட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.