ரோஹித் சர்மா  படம் | AP
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: அரைசதம் கடந்து ரோஹித் சர்மா அதிரடி!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

ரோஹித் சர்மா அதிரடி

டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஒவ்வொரு ஓவரிலும் ரோஹித் சர்மா பவுண்டரிகளை விரட்டி அசத்தினார்.

அதிரடியாக விளையாடிய அவர் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

குடிநீர் இடைவேளையின்போது, ரோஹித் சர்மா 62 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஷுப்மன் கில் 46 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT