இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய-மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகின்றன.
ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் இடம் பெற்ற ஐஎம்எல் தொடரில் மொத்தம் 6 நாடுகளின் அணிகள் பங்கேற்று ஆடின.
இறுதி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கா் தலைமையிலான இந்திய அணியும், பிரையன் லாரா தலைமையிலான மே.இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.
சச்சின் 156, யுவராஜ் 166 ரன்கள், பவுன் நேகி 8, இா்ஃபான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலையில் உள்ளனா். கடந்த 1983-இல் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதியது போல் இந்திய-மே.இந்திய தீவுகள் மோதுகின்றன. ராய்ப்பூரின் ஷாஹித் வீா் நாராயன் சிங் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது இந்தியா.