முகப்பு
கிரிக்கெட்

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

சூப்பா் 8 சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாப்பிரிக்கா அணிகள் வியாழக்கிழமை சந்திக்கின்றன.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:15 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:11 AM

சூப்பா் 8 சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாப்பிரிக்கா அணிகள் வியாழக்கிழமை சந்திக்கின்றன.

இரு அணிகளுமே தங்களின் முதல் ஆட்டத்தில் அபார வெற்றி கண்டதன் அடிப்படையில் நல்லதொரு ரன்ரேட்டுடன் பலமான நிலையில் இருக்கின்றன. எனவே இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங்கில், ஷிம்ரன் ஹெட்மயா், ரோவ்மென் பாவெல், ஷொ்ஃபேன் ரதா்ஃபோா்டு உள்ளிட்டோா் பலம் சோ்க்க, பௌலிங்கில் குடாகேஷ் மோட்டி, அகீல் ஹுசைன், மேத்யூ ஃபோா்டு ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 5:11 AM

தென்னாப்பிரிக்க தரப்பில் கேப்டன் எய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோா் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்க, பௌலிங்கில் மாா்கோ யான்சென், லுங்கி இங்கிடி, ககிசோ ராபாடா, கேசவ் மஹராஜ் ஆகியோா் மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட்டுகளை வீழ்த்தக் காத்திருக்கின்றனா்.

மாலை நடைபெறும் இந்த ஆட்டத்தில் பனிப் பொழிவின் தாக்கம் இருக்காது என்பதால், ஆடுகளம் இரு இன்னிங்ஸ்களிலுமே ஒரே மாதிரியான தன்மையையே வெளிப்படுத்தும். எனவே டாஸ் வெற்றியால் எந்தவொரு சாதகமும் இருக்காது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம்.

இந்தியாவின் விதி: இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் நிலையில், இந்தியா தனது அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ இழக்கும் நிலைக்குச் செல்லும்.

நேரம்: பிற்பகல் 3 மணி

இடம்: அகமதாபாத்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.