குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் சுட்டுக்கொலை
முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி.....
தென்னாப்பிரிக்காவில் முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் ஜோலானி டெட். இவர், தனது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் கூறினர்.
Advertisement
Advertisement
ஜோலானி தனது வீட்டிற்கு வந்து கேட் திறப்பதற்காகக் காத்திருந்தபோது, முகமூடி அணிந்த இரண்டு ஆயுதமேந்திய நபர்கள் அவரை மறைந்திருந்து தாக்கியுள்ளனர்.
38 வயதான ஜோலானி தனது காரில் இருந்தபோது சுடப்பட்டதாகவும், அவருடன் காரில் இருந்த 27 வயது பெண் பலமுறை சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோலானி 2007-2008 இல் டபிள்யூபிஎஃப்(உலக குத்துச்சண்டை சம்மேளனம்) டபி ஃபிளைவெயிட் பிரிவிலும், 2017 மற்றும் 2019 இல் டபிள்யூபிஓ(உலக குத்துச்சண்டை அமைப்பு) பேண்டம்வெயிட் பிரிவிலும் உலக சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Former world champion boxer Zolani Tete has been shot and killed at his home in South Africa, government officials said Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.