காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7ஆவது பதக்கத்தை உறுதிசெய்த சச்சின்!
காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சச்சின் சிவாக் அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து...
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சச்சின் (26 வயது) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் ஏழாவது பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீரர் சச்சின் சிவாக் ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிப் போட்டியில் போட்ஸ்வானாவின் வீரர் ட்ரெஷர் மொரேமி உடன் மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில், சச்சின் சிவாக் முதல் சுற்றில் 5:0 என அனைத்து நடுவர்களின் மதிப்பெண்களையும் பெற்றார். இரண்டாவது சுற்றிலும் 5:0 என அனைத்து நடுவர்களின் மதிப்பெண்களையும் பெற்று 5-0 என அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த அரையிறுதிப் போட்டி ஆக.1 ஆம் தேதி இந்திய நேரப்படி 1 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக, லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா கங்காஸ் (60 கிலோ எடைப் பிரிவு), ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜடுமானி சிங் (55 கிலோ எடைப் பிரிவு), சாக்ஷி சௌதரி (51 கிலோ எடைப் பிரிவு), அருந்ததி சௌதரி (70 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் பதக்கம் வெல்லும் நிலையில், இதில் ஏழாவதாக சச்சின் சாவக் இணைந்துள்ளார்.
இதில் மொத்தமாக ஐந்து பெண்களும், இரண்டு ஆண்களும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். இதுவரை இந்தியா 12 பதக்கங்களை (2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ள நிலையில், குத்துச்சண்டையில் மட்டுமே 7 பதக்கங்கள் உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
CWG 2026: Sachin Siwach seals place in men’s 60 kg semis, secures 7th medal for india in Boxing
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.