FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காமன்வெல்த்: அரையிறுதியில் விளையாடிய 10 இந்தியர்களும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை!

காமன்வெல்த் குத்துச்சண்டைப் பிரிவில் அரையிறுதியில் விளையாடிய 10 இந்தியர்களும் இறுதிப் போட்டிக்குத் தேர்வானது குறித்து...

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:26 pm IST
இறுதிப் போட்டிக்குத் தேர்வான 10 இந்தியர்கள். - படம்: எக்ஸ் / பிஎஃப்ஐ அஃபிசியல்.
பகிர்:

கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டைப் பிரிவில் அரையிறுதியில் விளையாடிய 10 இந்தியர்களும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி வரலாறு படைத்துள்ளார்கள்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இதுவரை இந்திய அணி 23 பதக்கங்கள் வென்றுள்ளன. அதில் 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்திலேயே தொடர்கிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேற்று நடந்த குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்ற 10 இந்தியர்களும் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள். இதனால், இந்தியாவுக்கு கூடுதலாக 10 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

இந்த பத்து இந்தியர்களில் 4 ஆடவர்கள், 6 பெண்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்கள். ஆடவர்களில் அன்குஷ் பாங்கல் (80 கிலோ எடைப் பிரிவு), ஜடுமுனி சிங் (55 கிலோ எடைப் பிரிவு), சச்சின் சிவாக் (60கிலோ எடைப் பிரிவு) நரேந்தர் பெர்வல் (90+ கிலோ எடைப் பிரிவு) ஆகிய நால்வரும் தேர்வாகியுள்ளார்கள்.

மகளிரில் ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ எடைப் பிரிவு), அருந்ததி சௌதரி (70 கிலோ எடைப் பிரிவு), சாக்‌ஷி சௌதரி (51 கிலோ எடைப் பிரிவு), லோவ்லினா (70 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா (60 கிலோ எடைப் பிரிவு) ஆகிய அறுவரும் தேர்வாகியுள்ளார்கள்.

summary

Commonwealth: All 10 Indians who played in the semi-finals have qualified for the final!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments