படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்வோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்வோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (மார்ச் 16) தொடங்குகிறது.

பாகிஸ்தான் கேப்டன் சொல்வதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்வோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அவர்களது திறமையைக் காட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் பலரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம் என்றார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுப் பொருள்களை இந்தியா நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

ஏதேன் தோட்டம்... பிரணிதா!

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தது யார்? தமிழர்களைத் தடுப்பதுதான் திராவிடமா?

நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் உத்தரவு: அமைச்சர்கள் நன்றி

அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!

SCROLL FOR NEXT