தில்லி அணி, தில்லி பயிற்சியாளர்.  படங்கள்: எக்ஸ் / தில்லி கேபிடல்ஸ்
கிரிக்கெட்

டபிள்யூபிஎல்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி..! பயிற்சியாளர் கூறியதென்ன?

டபிள்யூபிஎல் 3ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது குறித்து தில்லி பயிற்சியாளர் பேசியதாவது..

DIN

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய தில்லி அணி 141/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

கடந்தாண்டு ஆர்சிபியுடன் தோற்ற தில்லி இந்தமுறை மும்பையுடன் தோற்றது.

3ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் பேட்டி கூறியதாவது:

வீராங்கனைகளைக் குறைக்கூற முடியாது

இந்த நேரத்தில் அனைவரும் அதிகமாக காயப்படுகிறோம். இந்த ஆடுகளத்தில் 99 சதவிகதம் முறை 150 ரன்களை எளிதாக சேஸ் செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.

மும்பை அணியினர் இதைக் கடினமாக்கினர். எந்த நேரத்திலும் நாங்கள் முன்னிலை பெறமுடியவில்லை.

போட்டி முழுவதும் நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். ஆனால், கடைசியில் இலக்கை அடைய முடியவில்லை.

இந்தப் பெண்கள் நேர்மறையான எண்ணத்துடன் விளையாடினார்கள். அவர்களை குறைக்கூற முடியாது. நம்பிக்கையுடன் விளையாடினார்கள். அவர்களுக்கு மனத்தடை எதுவும் இல்லை.

3 முறையும் தோற்றது துரதிஷ்டவசம்

180 ரன்கள்தான் போதுமான இலக்காக எண்ணினோம். அதனால், 150 எளிதென நினைத்தோம். ஆனால், நாங்கள் அனைவரும் இப்போது வருத்தப்படுகிறோம்.

என்ன தவறாக நடந்ததென சிறிது நேரமெடுத்து சிந்திக்க வேண்டும். அதுதான் கிரிக்கெட்டும்கூட. இரண்டு தரமான அணிகள் விளையாடினால் இப்படித்தான் ஆகும்.

கடைசி 2 பந்தில் தோற்றோம். அது எப்படி வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்.

3 இறுதிப் போட்டிகளிலும் தோல்வியுற்றதுக்கு பொதுவான காரணம் எதுவும் நினைக்கவில்லை. கண்டிப்பாக ஒரு அணி வெல்லும், மற்றது தோற்கும்.

துரதிஷ்டவசமாக நாங்கள் 3 முறையும் தோல்வியின் பக்கம் இருந்து விட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தவெக 2வது மாநில மாநாடு தொடங்கியது: இளைஞர்கள் கூட்டத்தால் திணறும் மதுரை!

பாரபத்தியில் தவெக மாநாடு! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!!

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

SCROLL FOR NEXT