பிரதமர் நரேந்திர மோடி படம் | PTI
கிரிக்கெட்

பாகிஸ்தானைவிட சிறந்தது இந்திய அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானைவிட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணி பாகிஸ்தானைவிட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நான் கிரிக்கெட்டில் அனுபவசாலி கிடையாது. கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்கள் குறித்து எனக்குத் தெரியாது. எந்த அணி சிறந்த அணி என்பதை கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்தான் கூற வேண்டும். ஆனால், சில நாள்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியின் முடிவுகள் எந்த அணி சிறந்த அணி என்பதை வெளிக்கொணர்ந்தது.

ஒட்டுமொத்த உலகையும் உற்சாகமாக வைத்திருக்கும் ஆற்றல் விளையாட்டுக்கு இருக்கிறது என நினைக்கிறேன். விளையாட்டில் கடைபிடிக்கப்படும் நேர்மை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைக்கிறது. அதனால், நான் எப்போதும் விளையாட்டை குறைவாக மதிப்பிடமாட்டேன். மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக நான் நம்புகிறேன். விளையாட்டு வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது மக்களை ஒன்றிணைக்கிறது என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT