படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட்

2-வது போட்டியிலும் வெற்றி; டி20 தொடரில் நியூசிலாந்து முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று (மார்ச் 18) இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

பாகிஸ்தான் - 135/9

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது. மழையின் காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் சல்மான் அகா அதிகபட்சமாக 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து ஷதாப் கான் 26 ரன்களும், ஷகின் அஃப்ரிடி 22 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி, பென் சியர்ஸ், நீஷம் மற்றும் ஈஷ் சோதி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நியூசிலாந்து வெற்றி

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 135 ரன்கள் குவிக்க, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்ஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் களமிறங்கினர். இந்த இணை நியூசிலாந்துக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது.

அதிரடியில் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஃபின் ஆலன் 16 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின் களமிறங்கியவர்களில் டேரில் மிட்செல் 14 ரன்கள், மிட்செல் ஹே 21 ரன்கள் எடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 13.1 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT