கிரிக்கெட்

சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர்கள் ஏமாற்றம்

சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்..

DIN

விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.

காலை 10.15 மணி முதல் தொடங்கிய டிக்கெட் விற்பனை சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலருக்கு சிஎஸ்கே இணையதளத்தில் கோளாறுகள் காட்டப்பட்டதாலும், ரசிகர்கள் சிலர் சிரமத்துக்கு உள்ளாகினர்.

38,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கான டிக்கெட் வரிசை 2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதால் இந்த முறை போட்டியை நேரில் காண முடியாது என சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு சட்டத்துக்கு புறம்பான தளங்களில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதிகவிலைக்கு கள்ளச் சந்தையிலும் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ரசிகர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT