நடுவர்... 
கிரிக்கெட்

ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ

ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா? என்பதைப் பற்றி...

DIN

நிகழாண்டுக்கான ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா? என அனைவர் மத்தியிலும் கேள்வியெழுந்துள்ளது.

18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய விதிகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

இதையும் படிக்க: மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

அதில், இம்பாக்ட் பிளேயர் விதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த விதியின் மூலம் கடந்தாண்டு 250 க்கும் அதிகமான ரன்கள் அடிக்கப்பட்டன. இதனால், பந்துவீச்சாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தொடங்கும்போது கூறியது போலவே, 2027 ஆம் ஆண்டு வரை இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதியின் மூலம் ஒரு வீரரை மாற்றிக்கொள்ளலாம்.

இந்த விதிக்கு மும்பை கேப்டன்கள் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் கடந்த காலங்களில் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், இது விளையாட வாய்ப்புக் கிடைக்காத இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இருப்பதால் இந்த விதி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT