சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத் தொகை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதற்காக இந்தப் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.
இந்தப் பரிசுத் தொகை இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், தேர்வுக்குழுத் தலைவர்கள் என அனைவருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பரிசுத் தொகையில் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு என பிசிசிஐ குறிப்பிடவில்லை.
இது குறித்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, "தொடர்ந்து ஐசிசி கோப்பைகளை வெல்வது சிறப்பானது. உலக அளவில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் சைக்யா, “இந்த அளவுக்கு இந்திய அணியின் செல்வாக்கிற்கு காரணம் அவர்களது கடின உழைப்பு, திறமையான வெளிப்பாடு.
இந்த வெற்றி இந்தியாவின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உயர் தரத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளது. அடுத்த ஆண்டுகளிலும் இதை இந்திய அணி தொடரும் என்பதை உறுதியளிக்கிறேன்.
இந்திய வீரர்களின் அர்ப்பணிப்பும் ஈடுப்பாடும் புதிய அளவீடுகளை வைத்துள்ளன. மீண்டும் உலக அரங்கில் இந்திய அணி வளர்ச்சி அடைவார் என நம்புகிறேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.