ககிசோ ரபாடா படம் | AP
கிரிக்கெட்

போதைப் பொருள் பயன்படுத்தியதால் இடைக்கால தடை; கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சியளித்த ரபாடா!

போதைப் பொருள் பயன்படுத்தியதால் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

DIN

போதைப் பொருள் பயன்படுத்தியதால் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, அதன் பின் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகக் கூறி தாயகம் திரும்பினார்.

இந்த நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியன் காரணமாக தனக்கு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ககிசோ ரபாடா தெரிவித்துள்ளது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இது தொடர்பாக ககிசோ ரபாடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி அண்மையில் தாயகம் திரும்பினேன். உடல் சோர்வை நீக்கும் போதைப் பொருளை பயன்படுத்தியதால் எனக்கு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனக்கு பிடித்த கிரிக்கெட்டினை மீண்டும் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். என்னுடைய இந்த செயலுக்காக ஆழ்மனதிலிருந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ககிசோ ரபாடா விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத அா்ப்பணிப்புடன் தேச சேவையாற்ற வேண்டும்: தில்லிவாசிகளுக்கு துணை நிலை ஆளுநா் வேண்டுகோள்

தில்லி, என்சிஆரில் தமிழ் அமைப்புகள் சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

தலைநகரில் சுதந்திர தினத்தை வரவேற்ற மழை!

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

தலைநகரில் அடுத்த சில நாள்கள் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி

SCROLL FOR NEXT