மனைவி சஞ்சனாவுடன் பும்ரா.  
கிரிக்கெட்

எப்போதும் உன்னுடன் இருப்பேன்: மனைவி பிறந்தநாளில் பும்ரா நெகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது மனைவி பிறந்தநாளுக்கு கூறியதாவது...

DIN

மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா தனது மனைவி பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2013ஆம் ஆண்டு அறிமுகமான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்தியாவுக்கு 2018-இல் விளையாடத் தொடங்கினார்.

தற்போது, உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளராக அறியப்படும் பும்ரா கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனாவை கடந்த 2021இல் திருமணம் செய்தார்.

இந்தத் தம்பதிகளுக்கு 2 வயதாகும் அங்காட் எனும் ஆண் குழந்தை இருக்கிறான்.

சமீபத்தில் இந்தக் குழந்தை ஐபிஎல் போட்டியை காணவந்தபோது அமைதியாக இருந்ததால் சமூக வலைதளங்களில் பலரும் அந்தக் குழந்தைக்கு மனரீதியாக பிரச்னை இருப்பதாக பதிவிட்டது சர்ச்சையானது.

இது குறித்து சஞ்சானா மிகவும் வருத்தப்பட்டு இப்படியெல்லாம் பதிவிட வேண்டாமென கண்டித்தார்.

இந்நிலையில் சஞ்சனா பிறந்தநாளில் அவரது நடன விடியோவை பகிர்ந்த பும்ரா கூறியதாவது:

பிறந்தநாள் வாழ்த்துகள் என் இதயமே. உனக்கு எப்போதுமே மகிழ்ச்சியும் காதலுக்கு இருக்குமென வாழ்த்துகிறேன். உன்னுடைய எல்லா கடினமான நாள்களிலும் நானும் நமது மகனும் உடன் இருப்போம். நாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

SCROLL FOR NEXT