விராட் கோலி, ராகுல் வைத்யா.  படங்கள்: ஐபிஎல், இன்ஸ்டா/ ராகுல் வைத்யா.
கிரிக்கெட்

விராட் கோலியை விட அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கோமாளிகள்..! கொந்தளித்த பாடகர்!

விராட் கோலி, அவரது ரசிகர்கள் குறித்து ஹிந்தி பாடகர் கூறியதாவது...

DIN

ஹிந்தி பாடகர் விராட் கோலி, அவரது ரசிகர்கள் குறித்து கூறியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிவரும் கோலி அவ்வபோது சமூக வலைதளங்களிலும் எதாவது விளம்பரங்களுக்காகப் பதிவிடுவார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி அவ்னீத் கௌரின் ஃபேன் பேஜில் (ரசிகர்களின் பக்கத்தில்) நடிகையின் புகைப்படத்துக்கு லைக் செய்திருந்தது சர்ச்சையானது.

இதுகுறித்து கோலி, “இது அல்காரிதம் தவறினால் ஏற்பட்டது. நான் லைக் செய்யவில்லை” எனக் கூறியது கிண்டலுக்கு உள்ளானது.

கோலியும் அவரது ரசிகர்களும் செய்ததென்ன?

இந்த நிகழ்வின்போது ஹிந்தி பாடகர் ராகுல் வைத்யா (37) தனது இன்ஸ்டா பக்கத்தில், ”பெண்களே உங்களது படங்களுக்கு நான் லைக் செய்வதில்லை. அல்காரிதம் செய்திருக்கலாம்” எனக் கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவினால் விராட் கோலி தன்னை இன்ஸ்டாவில் பிளாக் செய்ததாகவும் அதுவும் இன்ஸ்டாகிராமின் அல்காரிதம் தவறினால் ஏற்பட்டிருக்கலாம் என சமீபத்தில் கூறியிருந்தார்.

இதனால் விராட் கோலி ரசிகர்கள் ராகுலை அவமானப்படுத்த தொடங்கினார்கள். அவரை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக கமெண்டுகளில் பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து ராகுல் வைத்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

கோலியை மனிதராக ஏற்க முடியாது

விராட் கோலி ரசிகர்கள் அவரைவிட மிகப்பெரிய கோமாளிகள்.

ராகுலின் பதிவு.

என்னைக் குறித்து அவதூறு பேசுங்கள் அது பொருத்துக் கொள்ளலாம். ஆனால், எனது மனைவி, சகோதரிகளை ஆபாசமாகப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல.

எனது குடும்பத்தினரைக் குறித்து பேசுவதற்கு தனிப்பட்ட நபர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால்தான் சொல்கிறேன் விராட் கோலி ரசிகர்கள் கோமாளிகள்! (மதிப்பே இல்லாத) கோமாளிகள்!

ராகுல் வைத்யா பதிவு.

கிரிக்கெட்டராக கோலியைப் பிடிக்கும். ஆனால், மனிதராக கோலியை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இது முதல்முறையல்ல..!

இதற்கு முன்பாக கோலியை ஆட்டமிழக்க செய்த பிலிப்ஸுக்குப் பதிலாக பிலிப்ஸ் எலக்ட்ரானிக் நிறுவனத்தையும் கிரிக்கெட்டர் அர்ஷத் கானுக்குப் பதிலாக நடிகர் அர்ஷத் கானை திட்டியதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT