இந்திய வீரர் விராட் கோலி மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர் என்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் பற்றி தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோருடம் சேர்ந்து விவரித்தனர்.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள் காட்டி தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கயி பேசுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் பலருக்கும் விராட் கோலியைப் பிடித்திருப்பதைப் போல எனக்கும் விராட் கோலியை மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.