ஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் அண்மையில் மோதிய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. அந்தத் தொடர் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான திருத்தப்பட்ட தரவரிசையை ஐசிசி வெளியிட்டது.
இதன்படி, பேட்டர்கள் பிரிவில் ஸ்மிருதி மந்தனா ஓரிடம் முன்னேறி 2-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த முத்தரப்பு தொடரில் மந்தனா 5 இன்னிங்ஸ்களில் 264 ரன்கள் சேர்த்து, தொடரிலேயே 2-ஆவது அதிகபட்ச ரன்கள் அடித்த வீராங்கனையாக இருந்தார். இறுதி ஆட்டத்தில் 116 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கும் முக்கியப் பங்களித்தார்.
கடைசியாக மந்தனா, 2019-இல் முதலிடம் பிடித்திருந்தார். டாப் 10 இடத்தில் தற்போது மந்தனா மட்டுமே உள்ளார். அடுத்த 10 இடங்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் ஏற்றம் கண்டு 15-ஆவது இடத்துக்கு வர, கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் ஓரிடம் சறுக்கி 16-ஆவது இடத்தைப் பிடித்தார்.
பெüலர்கள் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா மாற்றமின்றி 4-ஆம் இடத்தில் நிலைக்கிறார். முத்தரப்பு தொடரில் சிறப்பாக பெüலிங் செய்த ஸ்நேஹா ராணா, 4 இடங்கள் முன்னேறி 34-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆல்}ரவுண்டர்கள் பிரிவில் அதே தீப்தி சர்மா ஓரிடம் முன்னேறி 5-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அணிகள் பிரிவில் இந்தியா 2-ஆம் இடத்தில் நிலைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.