ரவீந்திர ஜடேஜா. படம்: எக்ஸ் / சிஎஸ்கே
கிரிக்கெட்

டெஸ்ட்டில் கேப்டனாகும் விருப்பம் இருக்கிறது: ஜடேஜா

இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளார்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் 2012-இல் இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார்.

தற்போது, ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் ஓராண்டாக நீடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியயிருக்கும் ஜடேஜா 3,370 ரன்களும் 323 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.

சமீபத்தில் ரோஹித் சர்மா, கோலி டெஸ்ட்டில் இருந்து விலகியதால் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அஸ்வின் உடனான யூடியூப் நேர்காணலில் ஜடேஜா பேசியதாவது:

வெவ்வேறு கேப்டன்களிடம் விளையாடி இருக்கிறேன்

நிச்சயமான எனக்கும் டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன்.

நான் விளையாடிய கேப்டன்களின் ஒவ்வொருவரின் மனநிலை குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். வீரர்களுக்கு என்ன தேவை என்பதும் எனக்கு புரியும்.

ஒவ்வொரு கேப்டனுக்கும் அந்த அணியை வழிநடத்துவதில் வெவ்வேறு மாதிரியான அணுகுமுறைகள் இருக்கும்.

நான் தோனி தலைமையில் அனைத்து வடிவங்களிலும் விளையாடி இருக்கிறேன். அவருடைய சிந்தனைகள் மிகவும் எளிமையாக இருக்கும்.

டி20, டெஸ்ட் போட்டிகள் வெவ்வேறானவை

ஒரு பேட்டர் குறிப்பிட்ட ஷாட்டினை அடிப்பார் என உணர்ந்தால் அந்தப் பகுதியில் ஃபீல்டர்களை நிறுத்தி பேட்டரை அசௌகரியத்து உள்ளாக்குவார் என்றார்.

டி20, ஐபிஎல் போட்டிகளில் அனைத்து பந்துகளுமே முக்கியமானது. இதுமாதிரி டெஸ்ட் போட்டிகள் கிடையாது. அனைத்து பந்துகளுக்கும் ஃபீல்டிங் மாற்ற தேவையில்லை.

டெஸ்ட்டில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப 2, 3 ஃபீல்டர்களை மாற்றலாம். பேட்டருக்கு ஏற்ப மாற்றத்தேவையில்லை. எளிமை, ஆனால் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்.

சமீபத்தில் அஸ்வின், “ஏன் ஜடேஜாவை டெஸ்ட்டில் கேப்டனாக்கக் கூடாது? புதிய கேப்டனுக்கு செல்வதைவிட அனுபவமிக்க வீரரை கேப்டனாக்கலாமே” எனக் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: 1,090 சிறப்பு பேருந்துகள்

திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

மேகாலயத்தின் ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ ஆளுங்கட்சியில் ஐக்கியம்

பிஎம் கிஸான்: விவசாயிகளுக்கு ஆக.2-இல் ரூ.20,500 கோடி விடுவிக்கிறாா் பிரதமா் மோடி

SCROLL FOR NEXT