இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த பிரதிகா ராவல், சக்கர நாற்காலியில் வந்து வெற்றியைக் கொண்டாடினார்.
நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த தொடரின் லீக் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பிரதிகா ராவல், 6 போட்டிகளில் 51.33 சராசரியுடன் 308 ரன்கள் குவித்தார். வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் காயமடைந்த பிரதிகா ராவல், அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், நேற்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினரின் கொண்டாட்டத்தில் சக்கர நாற்காலியின் வந்து பிரதிகா ராவல் கலந்துகொண்டார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவலை சக்கர நாற்காலியில் அமர வைத்து திடலுக்குள் உற்சாகத்துடன் அழைத்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.