மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரஜினி வாழ்த்து AP
கிரிக்கெட்

வரலாறு படைக்கப்பட்டுவிட்டது! மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரஜினி வாழ்த்து!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நவி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

”இந்தியாவுக்கு என்னவொரு அற்புதமான தருணம்! நமது நீலப் படைப் பெண்கள் துணிச்சல், ஆற்றல் ஆகியவற்றை மறுவரையறை செய்து, வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.

அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் நமது மூவர்ணக் கொடியை உலகம் முழுவதும் சுமந்துச் சென்றுள்ளார்கள். மனமார்ந்த வாழ்த்துகள்! வரலாறு படைக்கப்பட்டுவிட்டது. ஜெய் ஹிந்த்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth congratulates Indian women's cricket team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

காற்று மாசு: பிஎஸ்- 4 ரக தரநிலைக்கு கீழான 500 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சமய்பூா் பத்லியில் எஸ்யுவி வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

SCROLL FOR NEXT