சிட்னியில் நடைபெற்ற வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சனின் பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற நவ. 21 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கு முன்னதாக, இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆச்சரியமளிக்கும் விதமாக சிட்னியில் நடைபெற்ற பயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் போட்டியாளராக அல்லாமல் வலைப் பயிற்சி பந்து வீச்சாளராகக் கலந்து கொண்டு அவருக்குப் பந்து வீசினார்.
31 வயதான ஆலி ராபின்சன் சிட்னி பல்கலைக்கழக கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் நியூ சௌத் வேல்ஸ் வீரர்களான ஸ்மித் மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இருவரும் பந்து வீசி பயிற்சியில் ஈடுபட்டார்.
தி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மித் விளையாடவிருக்கிறார். இருவரும் வலைப் பயிற்சியின் போது ஸ்மித்துக்கு 45 நிமிடங்களை வரை ராபின்சன் பந்து வீசியுள்ளார்.
இதற்கு முன்னதாக இருவரும் இங்கிலாந்தில் உள்ள சஸெக்ஸில் அணியில் விளையாடியுள்ளனர்.
ஆஷஸ் தொடரில் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள ராபின்சன் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரிக்குப் பின்னர் காயம் மற்றும் உடற்தகுதி பிரச்சினைகளால் அவர் அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
கவுன்டி தொடரில் சஸெக்ஸ் அணிக்காக 39 விக்கெட்டுகளை அவர் வீழ்த்திய போதிலும் அவரை இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து லயன் அணிக்கு தேர்வு செய்யவில்லை.
இருப்பினும், அவர் அதற்குப் பதிலாக சிட்னி பல்கலைக்கழக அணிக்காக விளையாட முடிவெடுத்துள்ளார். இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராபின்சன் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.