இஸ்லாமாபாத் கார் வெடி விபத்தைத் தொடர்ந்து, கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் வந்திருக்கும் இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வீரர்களை மாநில அரசின் விருந்தினர்களாகப் பாதுகாப்போம் என அந்த மாகாணத்தின் உயர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
அடுத்ததாக 2,3-ஆவது ஒருநாள் போட்டிகள் முறையே நவ.13, நவ.15ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கடுத்து முத்தரப்பு டி20 தொடர்களில் ஜிம்பாம்வே அணியுடன் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானில் நேற்று (நவ.11) டிடிபி எனப்படும் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் இஸ்லாமாபாதில் 12 பேர் கொலை செய்யப்பட்டனர். அருகில் இருந்த கல்லூரியில் இருந்து 300 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இது பாகிஸ்தானுக்குச் சென்றுள்ள இலங்கை வீரர்களை பெரிதாகக் கவலையுறச் செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஷின் நக்வி வீரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெஷாவர் பள்ளியில் கடந்த 2018-இல் இதைவிடப் பெரிய தாக்குதல் நடந்தேறியதும் கவனிக்கத்தக்கது.
மூன்றாண்டுகளுக்கு முன்பாக ராவல்பிண்டியில் நடைபெற இருந்த வெள்ளைப் பந்து தொடரில், பாதுகாப்பு குறைவு காரணமாக வந்த தகவல்களால் அந்த அணி ஒரு போட்டியில் கூட விளையாடமால் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச், 2009-இல் இலங்கை அணியின் பேருந்தை கடாபி திடலுக்கு அருகில் டிடிபி தீவிரவாதிகள் தாக்கினர். அதனால், பத்தாண்டுகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.