மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு விற்கப்பட்டுள்ளார்.
போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு இது நல்வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான வீரராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கிறார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பந்துவீச்சு மட்டுமல்லாமல், பேட்டிங்கும் விளையாடும் திறமையுள்ள இவர் தற்போது லக்னௌ அணிக்கு மாறியுள்ளார்.
மொத்தமாக 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 ரன்கள், 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
புதிய அணிக்குச் சென்றாலாவது அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.