கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தங்களது ஆட்டத்தை மாற்றிக் கொண்டு முதல் டெஸ்ட்டில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இதுபோன்ற ஒரு போட்டிக்குப் பிறகு, தோல்வி குறித்து நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே இருக்க முடியாது. இலக்கை எட்டிப் பிடித்து இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். போட்டியில் தொடர்ந்து அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. எங்களுக்கான வாய்ப்பினை எங்களால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
இந்த மாதிரியான ஆடுகளத்தில் 120 என்ற இலக்கு மிகவும் சவாலானது. ஆனால், அழுத்தம் எடுத்துக் கொள்ளாமல் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அடுத்தப் போட்டியில் கண்டிப்பாக வலுவாக மீண்டு வருவோம். டெம்பா பவுமா மற்றும் கார்பின் போஸ்ச் இடையேயான பார்ட்னர்ஷிப் எங்களுக்கு தலைவலியாக அமைந்தது என்றார்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: சஞ்சு மோகன்லால் சாம்சன்... சிஎஸ்கேவின் தேர்வு சரியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.