இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது.
தெ.ஆ. அணியில் அதிகபட்சமாக செனுரன் முத்துசாமி 109 ரன்கள், மார்கோ யான்சென் 93 ரன்கள் குவித்தார்கள்.
குவாஹாட்டியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டில் தெ.ஆ. அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
151.1 ஓவர்களில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் குல்தீப் 4, ஜடேஜா, சிராஜ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
முதல் டெஸ்ட்டை தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதில் வெல்லாவிட்டால் 0-2 என இந்திய அணி தொடரை இழக்க வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.