இந்திய மகளிர் அணி, பிரதமர் மோடி.  படங்கள்: எக்ஸ் / மோடி.
கிரிக்கெட்

கடின உழைப்பு, விடாமுயற்சி... பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு மோடி புகழாரம்!

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய அணி பற்றி மோடி கூறியதாவது...

இணையதளச் செய்திப் பிரிவு

பார்வையற்றோருக்கான அறிமுக டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இதில் பங்கேற்ற ஒவ்வொரு வீராங்கனையையும் சாம்பியன் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நேபாளம் மற்றும் இந்திய மகளிரணி மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் 114/5 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவர்களில் 117/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பார்வையற்றோருக்கான அறிமுக டி20 உலகக் கோப்பை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு எனது வாழ்த்துகள். இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் கோப்பை வென்றுள்ள விதம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது.

கடின உழைப்பு, கூட்டு முயற்சி, விடா முயற்சியின் சான்றாக இந்த வரலாற்று வெற்றி இருக்கிறது.

ஒவ்வொரு வீராங்கனயும் சாம்பியன்தான். இந்த அணியின் வருங்காலத்துக்கும் வாழ்த்துகள். அடுத்த தலைமுறைகளையும் இந்த வெற்றி உத்வேகம் ஊட்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! முதல்வர் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... கிராம் ரூ.300-ஐ நோக்கி வெள்ளி!

SCROLL FOR NEXT