முகப்பு
கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பேட்டிங்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:22 AM
- படம் | ஐசிசி உலகக் கோப்பை (எக்ஸ்)
பகிர்:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (பிப்ரவரி 6) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

அரையிறுதிப் போட்டியில் களமிறங்கிய அணியில் மாற்றமில்லாமல் அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

summary

In the Under-19 World Cup final, the Indian team won the toss and elected to bat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.