தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0-2 என தொடரை இழந்ததால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.
கடந்த டபிள்யூடிசி (2023-25) சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் இந்திய அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
குவாஹாட்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்தக் காரணத்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 100 பிசிடி (சராசரி புள்ளிகள்) உடன் முதலிடத்தில் நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.
டபிள்யூடிசி 2025-27 பட்டியல்
1. ஆஸ்திரேலியா - 100.00 புள்ளிகள்
2. தென்னாப்பிரிக்கா - 75.00 புள்ளிகள்
3. இலங்கை - 66.67 புள்ளிகள்
4. பாகிஸ்தான் - 50.00 புள்ளிகள்
5. இந்தியா - 48.15 புள்ளிகள்
6. இங்கிலாந்து - 36.11 புள்ளிகள்
7. வங்கதேசம் - 16.67 புள்ளிகள்
8. மேற்கிந்தியத் தீவுகள் - 00.00 புள்ளி
9. நியூசிலாந்து - 00.00 புள்ளி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.