சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த உர்வில் படேல் அதிரடியாக 31 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
சயித் முஷ்டக் அலி தொடரில் சர்வீஸ் அணிக்கு எதிராக இந்த அதிரடியான சதத்தை அடித்துள்ளார்.
சயித் முஷ்டக் அலி தொடரில் டாஸ் வென்ற உ.பி. கேப்டன் உர்வில் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சர்வீஸ் அணி 20 ஓவர்களில் 182-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கௌரவ் கோச்சார் 60 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய உ.பி. அணி 12.3 ஓவரில் 183/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் கேப்டன் உர்வில் படேல் 37 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி 116 ரன்கள் குவித்தார்.
இவர் ஏற்கனவே இந்தத் தொடரில் 28 பந்துகளில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.