ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விலைபோகாத (unsold) இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்-பாஸ் தொடரில் முழுமையாக பங்கேற்க முடிவெடுத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் பிரபலமான பிக்-பாஸ் தொடரில் விளையாடுவதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சமீபத்தில், டெஸ்ட், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாட இருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் பிக்பாஸ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பிபிஎல் தொடரைத் தொடர்ந்து ஐஎல்டி20 தொடரிலும் அஸ்வின் விளையாட முடிவு செய்திருந்தார்.
அவர் அதிகபட்ச அடிப்படை தொகையான 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்குப் பதிவு செய்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.
பிபிஎல் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐஎல்டி20க்கான போட்டிகள் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் என்பதால், பிபிஎல்லின் முதல் மூன்று வாரங்கள் அஸ்வின் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனதால் அவர் பிக்பாஸ் தொடரில் முழுமையாக விளையாட முடிவெடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.