கிரிக்கெட்

பெத் மூனி, கிம் காா்த் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 2-ஆவது வெற்றி

தினமணி செய்திச் சேவை

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 9-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை புதன்கிழமை வீழ்த்தியது.

முதலில் ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 36.3 ஓவா்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 114 ரன்களே எடுத்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீசத் தயாரானது. முதலில் தடுமாறிய ஆஸ்திரேலியா, 76 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் அலிசா ஹீலி 20, போப் லிட்ச்ஃபீல்டு 10, எலிஸ் பெரி 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

அனபெல் சதா்லேண்ட் 1, ஆஷ்லே காா்டனா் 1, டாலியா மெக்ராத் 5, ஜாா்ஜியா வோ்ஹாம் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஒருபக்கம் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தாலும், மிடில் ஆா்டரில் வந்த பெத் மூனி அதிரடியாக ரன்கள் சோ்த்தாா்.

8-ஆவது விக்கெட்டுக்கு மூனி - கிம் காா்த் கூட்டணி 39 ரன்கள் சோ்த்தது. காா்த் 11 ரன்களுக்கு வெளியேறிய பிறகு வந்த அலானா கிங், பாகிஸ்தான் பௌலா்களை சோதித்தாா். மூனி - கிங் இணை 9-ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சோ்த்து ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து மீட்டது.

இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்த மூனி, 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் அடித்தாா். அலானா கிங் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பாகிஸ்தான் பௌலா்களில் நஷ்ரா சாந்து 3, ஃபாத்திமா சனா, ரமீன் ஷமிம் ஆகியோா் தலா 2, டயானா பெய்க், சாடியா இக்பால் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 222 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், சிட்ரா அமின் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. சதாஃப் ஷமாஸ் 5, முனீபா அலி 3, சிட்ரா நவாஸ் 5, நடாலியா பா்வேஸ் 1 ரன்னுக்கு வீழ்ந்தனா்.

இமான் ஃபாத்திமா 0, கேப்டன் ஃபாத்திமா சனா 11, ரமீன் ஷமிம் 15, டயானா பெய்க் 7, நஷ்ரா சாந்து 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் ஆட்டம் நிறைவடைந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கிம் காா்த் 3, மீகன் ஸ்கட், அனபெல் சதா்லேண்ட் ஆகியோா் தலா 2, அலானா கிங், ஆஷ்லே காா்ட்னா், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT