இந்திய மகளிரணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 28 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
13-வது மகளிர் உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரின் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் 5-வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும் விசாகப்பட்டினத்தில் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ய இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 7 ரன்கள் எடுத்தபோது ஒரு காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவரான ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 1997 ஆம் ஆண்டில் பெலிண்டா 970 ரன்கள் குவித்திருந்தார். தற்போது ஸ்மிருதி மந்தனா 17 இன்னிங்ஸ்களில் விளையாடி 982* ரன்கள் குவித்துள்ளார்.
ஒருநாள் தொடரில் ஓராண்டில் குவிக்கப்பட்ட அதிக ரன்கள்
ஸ்மிருதி மந்தனா - 982* ரன்கள் - 2025 (இந்தியா)
பெலிண்டா கிளார்க் - 970 ரன்கள் - 1997 (ஆஸ்திரேலியா)
லாரா வோல்வோர்ட் - 882 ரன்கள் - 2022(தென்னாப்பிரிக்கா)
டெப்பி ஹாக்லி - 880 ரன்கள் - 1997 (நியூசிலாந்து)
ஆமி சட்டெர்த்வைட் - 853 ரன்கள் -2016 (நியூசிலாந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.