உலகக் கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
நாட் ஷிவர் பிரண்ட் சாதனை
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 117 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இந்த சதத்தின் மூலம், உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதங்கள் அடித்துள்ள வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் இது அவரது 5-வது சதமாகும்.
அவரைத் தொடர்ந்து, டம்மி பீமௌண்ட் 32 ரன்களும், ஹீதர் நைட் 29 ரன்களும் எடுத்தனர். சார்லோட்டி டீன் 19 ரன்கள் எடுத்தார்.
இலங்கை தரப்பில் இனோகா ரணவீரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுதேசிகா பிரபோதனி மற்றும் சுகந்திகா குமாரி தலா இரண்டு விக்கெட்டுகளையும், கவிஷா தில்ஹாரி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.