ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஷேன் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் ஒரு சதத்தை நிறைவு செய்துள்ளார்.
ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் லபுஷேன் தனது நான்காவது சதத்தினை நிறைவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக இருக்கும் மார்னஸ் லபுஷேன் கடந்த சில ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்தார்.
சதம் அடிக்காததால் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் பிளேயிங் லெவனில் இருந்தும் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், உள்ளூர் போட்டிகளில் அசத்தலாக விளையாடி வருகிறார். கடந்த ஐந்து இன்னிங்ஸில் 4 சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் லபுஷேன் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு தனது பேட்டினால் பதில் சொல்லிவருகிறார்.
லபுஷேனின் இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிங்கம் மறுபடி திரும்புதம்மா பாடலுடன் ஸ்டோரி பதிவிட்டு வருகிறார்கள்.
லபுஷேன் சௌத் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 159 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது அந்த அணி 67 ரன்கள் முன்னிலை வக்கிறது.
மொத்தமாக லபுஷேன் 58 டெஸ்ட் போட்டிகளில் 4435 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 11 சதம், 23 அரைசதம் அடித்திருக்கிறார். சராசரி 46.19ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.