நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை (அக்டோபர் 18) தொடங்குகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் விவரம்
பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக் (கேப்டன்), டாம் பாண்டன், சாம் கரண், ஜோர்டான் காக்ஸ், பிரைடான் கார்ஸ், லியம் டாஸன், அடில் ரஷீத், லூக் வுட்.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான தொடரில் ரன்கள் குவிக்காவிட்டால் ரோஹித், கோலி நீக்கப்படுவார்களா? அகர்கர் பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.