மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான போட்டிக்குப் பிறகு பேசிய அவர் இதயம் உடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 284/6 ரன்கள் எடுக்க, இந்திய அணி 288/8 ரன்களே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துடன் தோல்வியைச் சந்தித்தது.
திருப்புமுனை இதுதான்...
தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றுள்ளது. இது குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியதாவது:
ஸ்மிருதியின் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும் எங்களுக்கு அதிகமான பேட்டர்கள் இருக்கிறார்கள்.
எப்படி ஆட்டம் மாறியதென தெரியவில்லை, இங்கிலாந்துக்கு வாழ்த்துகள். அவர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். தொடர்ச்சியாக விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இதயம் நொறுங்கியது...
இந்தத் தோல்வி மோசமான உணர்வைத் தருகிறது. கடினமாக உழைத்து, அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தோம். ஆனால், கடைசி 5-6 ஓவர்கள் திட்டமிட்டபடி செல்லவில்லை.
இது மிகவும் மோசமானது. நிச்சயமாக இதயம் நொறுங்கிய உணர்வுதான்.
நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்; விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும் கடைசியான கோட்டை தாண்டியாக வேண்டும். ஏனெனில் கடைசி மூன்று போட்டிகளுமே நன்றாக விளையாடியும் தோற்றோம்.
முக்கியமான அடுத்த போட்டியில் அந்தக் கோட்டினை தாண்டுவோம் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.