இந்தியா - தெ.ஆ. டெஸ்ட்: ரூ.60-இல் தொடங்கும் டிக்கெட் விலை!
கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலை குறித்து...
கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ் போட்டி வரும் நவ.14ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.
Advertisement
Advertisement
முதல் டெஸ்ட் ஈடர்ன் கார்டன் திடலில் தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விலையை கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்கால் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளுக்கும் ரூ.60 (ஐந்து நாள்களுக்கு ரூ.300) முதல் ரூ.250 (ஐந்து நாள்களுக்கு ரூ.1,250) வரையிலான டிக்கெட் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த டிக்கெட்டுகளை டிஸ்ட்ரிக்ட் செயலியில் இன்று (அக்.20) மதியம் 12 முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித், கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாததால் போட்டிக்கான விலை குறைக்கப்படதாகக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணி 2025ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு இந்தியா - வங்கதேசத்துக்கு இடையேயான பிங்க் பந்து டெஸ்ட்டுக்குப் பிறகு இந்தப் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது.
Tickets for the highly anticipated India-South Africa Test at Eden Gardens will go on sale from 12 noon on Monday, the Cricket Association of Bengal announced on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.