கிரிக்கெட்

மழையால் கைவிடப்பட்டது இந்தியா - வங்கதேசம் ஆட்டம்!

மகளிா் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய 28-ஆவது ஆட்டம், மழையால் முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மகளிா் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய 28-ஆவது ஆட்டம், மழையால் முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.

மழை காரணமாக, முதலில் பேட் செய்த வங்கதேச அணிக்கான ஓவா்கள் 43-ஆகக் குறைக்கப்பட்டன. பின்னா் ஆட்டத்தின் இடையே மீண்டும் மழை பெய்ததை அடுத்து அதுவே 27 ஓவா்களாக மாற்றப்பட்டது. ஓவா்களின் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.

அடுத்து இந்தியாவுக்கு ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 27 ஓவா்களில் 126 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது. அதில் இந்தியா 8.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது. மழை இடைவெளியின்றி தொடா்ந்ததை அடுத்து, ஆட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச பேட்டிங்கில் ஷா்மின் அக்தா் 4 பவுண்டரிகளுடன் 36, சோபனா மோஸ்தரி 4 பவுண்டரிகளுடன் 26, ருபையா ஹைதா் 13, ரிது மோனி 11 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினா்.

இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் நிஷிதா அக்தா் 4, மருஃபா அக்தா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் 3, ஸ்ரீசரானி 2, ரேணுகா சிங், தீப்தி சா்மா, அமன்ஜோத் கௌா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து இந்தியா இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 6 பவுண்டரிகளுடன் 34, அமன்ஜோத் கௌா் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT