இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி ரஞ்சி கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பைத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்த உதவினார்.
இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய கடின உழைப்பைக் கொடுத்துள்ளேன். அதிர்ஷ்டமும் சிறிது தேவை என்பதை நான் நம்புகிறேன். ஒவ்வொரு வீரரும் தங்களது நாட்டுக்காக விளையாட வேண்டும் என விரும்புவார்கள். அதனால், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயாராக இருக்கிறேன்.
இந்திய அணிக்காக விளையாட எப்போதும் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஆடுகளத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன். இந்திய அணியில் இடம்பெறுவதும், இடம்பெறாததும் தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.