PTI
கிரிக்கெட்

ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதம் வீண்: இந்தியா போராடி தோல்வி!

இந்திய மகளிர் அணி போராடி தோல்வி! தொடரை வென்றது ஆஸி.!

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியைத் தழுவியது. புது தில்லி அருன் ஜெட்லி திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்து 47.5 ஓவர்களில் ஆட்டமிழந்தது.

அடுத்து இலக்கை ஜெட் வேகத்தில் விரட்டிய இந்திய அணியில், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 198 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 63 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார். அதில் 17 பௌண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அரைசதம் கடந்தார். தீப்தி ஷர்மா 72 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் போராடிய ஸ்நேஹ் ராணா 35 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் 369 ரன்களில் ஆட்டமிழந்தது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 - 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. தொடர் நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் கருவூலமாக திகழும் அரசியல் சாசனம்! - உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங்

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டுக்கு இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய ஊழியா்கள் இருவா் கைது

மாநிலங்களின் சுதந்திரத்தை பறித்து கூட்டாட்சிக்கு நெருக்கடி: மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT