இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் என ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் அலிஸா ஹீலி தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
இந்த நிலையில், இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் என ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் அலிஸா ஹீலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் வலுவாக உள்ளது. அணியில் இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் இருக்கிறார்கள். சிலர் முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளார்கள். ஒரு அணியாக சிறப்பான இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன். வீராங்கனைகள் போட்டிகளின்போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் அதிக நேரம் செலவிடுகிறார்கள். உலகக் கோப்பைத் தொடரில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே எங்களது அணி நல்ல நிலையில் உள்ளது என்றார்.
உலகக் கோப்பைத் தொடரில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.